சென்னையில் குப்பைகளை தரம் பிரிக்காதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
பைல் படம்.
சென்னையில் தினசரி சராசரியாக சுமார் 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகிறது. தினசரி 100 கிலோவிற்கு மேல் திடக்கழிவு உற்பத்தி செய்யும் அல்லது 5000 ச.மீ. பரப்பளவு மற்றும் அதற்கு மேல் பரப்பளவு கொண்ட வளாகத்தின் உரிமையாளர்களாகிய பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்கள் வளாகத்திற்குள்ளேயே திடக்கழிவுகளை மக்க செய்யவும் மற்றும் மக்காத குப்பையை தரம்பிரித்து மக்கும் குப்பையினை உரமாக்கிடவும், மேலும் மக்காத குப்பையினை மறுசுழற்சியாளர்களிடம் ஒப்படைக்க மாநகராட்சி அறிவுறுத்தியது.
அதிக அளவில் திடக்கழிவு உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் மற்றம் இதர பிற நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கும் திடக்கழிவுகளை தாங்களே கையாள அறிவுறுத்தியது.
மக்கும் குப்பைகளை வளாகத்திலேயே உரமாக்கவும், மேலும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி முறையில் மீண்டும் எவ்வாறு பயன்படுத்துவது எனவும், குப்பைகளை தரம் பிரிப்பது மற்றும் கழிவுகளை குறைப்பது தொடர்பாக மாநகராட்சியால் சேவை வழங்குநர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.
'நம் திடக்கழிவு நம் பொறுப்பு' திட்டம் மூலமாக குப்பையில்லா சென்னை உருவாக்க வழிமுறைகளை கால அவகாசம் வழங்கிய நிலையில் வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வரையில் அபாரதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu