ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலனுக்கு டெங்கு பாதிப்பு

ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலனுக்கு டெங்கு பாதிப்பு
X

ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ டாக்டர் எழிலன் ( பைல் படம்)

திமுகவை சேர்ந்த ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலனுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர் கொரோனா தடுப்புப் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

தனது தொகுதி உட்பட பல்வேறு இடங்களில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வர உதவி செய்தார். இந்நிலையில் அவருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டதை அடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!