9 முதல் 12-ம் வகுப்பு பாடங்களை 30 சதவீதம் குறைக்க முடிவு?

9 முதல் 12-ம் வகுப்பு  பாடங்களை 30 சதவீதம் குறைக்க முடிவு?
X

பைல் படம்.

9 முதல் 12-வகுப்பு வரை 30 சதவீத பாடங்கள் குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. 9 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு செப்டம்பர் 1 தேதி முதல் நேரடியாக வகுப்புகள் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஆனால் 3 மாதங்கள் கழித்து பள்ளிக்கூடங்கள் திறப்பதால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடங்களை 30 சதவீதம் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது. அதோடு பாடத்திட்டத்தை 30 சதவீதம் குறைப்பதற்கும் இதில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

தற்போது சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. எனவே தமிழக அரசும் கடந்த ஆண்டைபோல் 30 சதவீத பாடத்திட்டங்களை குறைத்து அறிவிப்பு வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!