13ம் தேதிவரை வங்கி வேலை நேரம் குறைப்பு: வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு!

13ம் தேதிவரை வங்கி வேலை நேரம் குறைப்பு: வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு!
X

கோப்பு படம்.

வருகிற 13ம் தேதி வரை வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்படுவதாக வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடனான ஊரடங்கு வருகிற 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுளள்து. இதையடுத்து வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்டுள்ள அறிப்பில், ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக வங்கி வேலை நேரத்தையும் வருகிற 13ம் தேதி வரை குறைக்கப்படுகிறது.

வங்கி கிளைகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கி பரிவர்த்தனைகள் ஏற்கனவே அறிவித்ததுபோல், பகல் 2 மணி வரை மட்டுமே நடைபெறும். மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் வழக்கம்போல் மாலை 5 மணி வரை செயல்படும். கிளைகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள், மாற்று முறையில் செயல்டுவார்கள்.

ரொக்கப் பரிவர்த்தனை, ஆன்லைன் வரிவர்த்தனைகளுக்கு எ.இ.எப்.டி. எனும் தேசிய மின்னணு பரிமாற்றம், ஐ.எம்.பி.எஸ். எனும் உடனடி கட்டண சேவை மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். என்ற ஒரு வங்கியில் இருந்து மற்ரு வங்கிக்கு பணம் அனுப்பும் சேவை, நிகழ்நேர மொத்த தொகை செலுத்துதல் போனற் சேவைகளை வழங்க வேண்டும்.

அரசு வர்த்தகம், காசோலை பரிவர்த்தனை சேவைகளை அளிக்க வேண்டும். ஏ.டி.எம். ரொக்கம் செலுத்தும் எந்திரம் போன்றவை செயல்படுவதை வங்கி கிளைகள் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த செயல்முறையை அனைத்து வங்கிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் வங்கிகளுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.

Tags

Next Story