சிறுமியை திருமணம் செய்து, குடும்பம் நடத்திய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்து, குடும்பம் நடத்திய வாலிபர் போக்சோவில் கைது
X

போக்சொவில் கைது செய்யப்பட்ட வாலிபர் ஆண்டனி

திருவொற்றியூர் பகுதியில் 17 வயது சிறுமியை திருமணம் முடித்து குடும்பம் நடத்திய வாலிபரை போக்சோவில் கைது செய்தனர்

சென்னை, எண்ணூர், சுனாமி குடியிருப்பு, 81வது பிளாக்கை சேர்ந்தவர் பாபு, இவரின் மகன் ஆண்டனி(19), இவருக்கு, தாங்கல், திருவொற்றியூர் நெடுஞ்சாலையை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அந்த சிறுமியை இவர் ஆசை வார்த்தை கூறி காதலிக்க ஆரம்பித்துள்ளார், கடந்த 17ம் தேதி அன்று, சிறுமி காணாமல் போனார், இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர்கள் திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இது தொடர்பான விசாரணையில், ஆண்டனி, அந்த சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது. சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர் ஆண்டனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!