சீட்டு பணம் கேட்டு தரக்குறைவாக திட்டியதால் மனமுடைந்த பெண் தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட சரண்யா
திருவொற்றியூர் அருகே சீட்டு பணம் கேட்டு தரக்குறைவாக திட்டியதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருவொற்றியூர் அடுத்த தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் பகுதியில் வசித்து வருபவர் சரண்யா ( 32)என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அவருடைய கணவர் வேலுவும் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில், அதே பகுதியைச் சார்ந்த மகளிர் குழு நடத்தும் சாந்தி என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் சீட்டு பணம் போட்டு பணத்தை எடுத்துவிட்டு பாதி தொகை கட்டிய நிலையில் மீதமுள்ள தொகையை சில மாதங்களாக கட்டமுடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சீட்டு பணத்தை வசூலிக்கும் சாந்தி என்பவர் சரண்யாவின் வீட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்து பணத்தை கட்டாததைக் கண்டித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரண்யா எறும்பு மருந்தை தண்ணீரில் கலக்கிக் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் இதனை அறிந்த அவரது கணவர் உடனடியாக சரண்யாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி கொடுத்து பின்பு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தார்
இந்நிலையில் அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து சிகிச்சை பலனின்றி சரண்யா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சாந்தி என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu