பேரறிவாளன் விவகாரத்தில் எதிர்ப்பை காட்டுவோம்- விஜய்வசந்த் எம்.பி.

சென்னையில் ராஜீவ் காந்தி நினைவு தின ஜோதி ஊர்வலத்தை விஜய் வசந்த் எம்பி துவக்கி வைத்தார்.
வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் எம். எஸ். திரவியம் தலைமையில் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு நாளையொட்டி ராஜீவ் ஜோதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ராஜீவ் ஜோதி ஊர்வலத்தை விஜய் வசந்த் எம்பி தொடங்கி வைத்தார். எம்.எஸ்.திரவியம் தலைமையில் ஜோதியை நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திருவொற்றியூரில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் திருவொற்றியூர் ராயபுரம் ஆர்.கே. நகர் கிண்டி சைதாப்பேட்டை போரூர் பூந்தமல்லி வழியாக ஸ்ரீபெரும்புதூர் சென்றடையும்.
அங்கு மாநில தலைவர் கே எஸ் அழகிரியிடம் ஜோதி ஒப்படைக்கப்படும் அடுத்த மூன்று மாதங்களில் பல்வேறு மாநிலங்கள் வழியாக டெல்லியில் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு இந்த ஜோதி எடுத்துச் செல்லப்பட உள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் பேரறிவாளன் விடுதலை குறித்து பேசுகையில்
கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்களாக எங்களது எதிர்ப்பு உணர்வை காட்டிக்கொண்டே இருப்போம் .காங்கிரஸ் இரட்டைவேடம் போடுவதாக கூறும் அண்ணாமலை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் இருப்பார் என்று அவருக்கே தெரியாது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu