இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி விழுந்து பலி

இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி விழுந்து பலி
X
எண்ணூரில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி விழுந்து பலியானார்.

வடசென்னையை அடுத்த எண்ணூர் காசிகோயில் குப்பத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (58). எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்த இவர், பணி முடிந்து எண்ணூர் சிவகாமி பகுதியை ஒட்டியுள்ள மேம்பாலத்தி்ல், இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது, திடீரென வாகனத்தில் கோளாறு ஏற்படவே, நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளார். உடனடியாக அவரை மீட்ட அப்பகுதியில் உள்ள பொது மக்கள், உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!