சென்னையில் செல்போனுக்காக ஒருவரை கொலை செய்த 2 பேர் கைது

சென்னையில் செல்போனுக்காக ஒருவரை கொலை செய்த 2 பேர் கைது
X
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் செல்போனுக்காக தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் செல்போனுக்காக தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாக கூறப்படுவதாவது: சென்னை தண்டையார்பேட்டை இளைய முதலி தெரு மேம்பாலத்திற்கு கீழே பிளாட்பார வாசிகள் பல தங்கியுள்ளனர். அப்பகுதியில் கூலி வேலை செய்து கொண்டு இரவில் அங்கு தங்குவது வழக்கம்.புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அப்பு(24) என்பவர் அந்த பகுதியில் இரவு தங்குவது வழக்கம். இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்த மகேஷ்( 29) என்பவரது செல்போனை எடுத்துக் கொண்டாராம்.

இது குறித்து மகேஷ், அப்புவிடம் கேட்டபோது அப்பு தர முடியாது உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் தனது நண்பர் வைரமுத்து(24) என்பவருடன் மது அருந்திவிட்டு நேற்று இரவு மாட்டுவண்டியில் தூங்கிக் கொண்டிருந்த அப்புவை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டுள்ளனர்.

அவரது அலறல் சத்தத்தை கேட்டு அங்கே படுத்து இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளனர் அவர்கள் படுகாயமடைந்த அப்புவை தூக்கி கொண்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றனர் அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் அப்பு மரணம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் உதவி ஆணையர் முகமது நாசர் ஆய்வாளர் வானுவாமலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் கொலையாளிகள் மகேஷ், வைரமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா