வடசென்னையில் சுனாமி ஆழிப் பேரலையால் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி

வடசென்னையில் சுனாமி ஆழிப் பேரலையால் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி
X

ஆழிப் பேரலையால் உயிரிழந்தர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நினைவு ஊர்வலத்தில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.பி.சங்கர் (திருவொற்றியூர், எஸ்.சுதர்சனம் (மாதவரம்),

சுனாமியால் உயிரிழந்தோரின் 19 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வடசென்னையில் பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது

வடசென்னையில் சுனாமி ஆழிப் பேரலையால் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி

கடந்த 2024-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையால் உயிரிழந்தோரின் 19-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வடசென்னையில் பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி ஏற்பட்ட உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலை உலகையே உலுக்கியது. உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்தியாவில் மட்டும் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர கிராமங்களில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொந்தபந்தங்களை பறி கொடுத்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதியாயின. இந்நிகழ்வு நடந்து 19 ஆண்டுகளைக் கடந்தும் இதனால் பாதிக்கப்பட்ட பலரது இதயத்திலும் ஆறாத வடுவாகவே இருந்து வருகிறது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்ட இடங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் ல் வடசென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

திருவொற்றியூரில் காசி விஸ்வநாதர் கோயில் குப்பம் அருகே எண்ணூர் விரைவு சாலையில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் பால்குடம் ஏந்தி நினைவு ஊர்வலம் நடைபெற்றது. இறுதியாக கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர், மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ., மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம், இளைஞர் அணி அமைப்பாளர் மதன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கங்கிரஸ் கட்சி சார்பில் திருவொற்றியூர் கன்னிகோயில் அருகே கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் எஸ். ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ, மீனவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜோர்தான், மாமன்ற உறுப்பினர் எம்.எஸ்.திரவியம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.

காசிமேட்டில் அஞ்சலி:

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கடல் அன்னையை பெண்ணாக உருவகப்படுத்தி அமைக்கப்பட்ட மணல் சிற்பத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், மாவட்டச் செயலாளர் த.இளைய அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் இரு நூறுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்று கடலில் பாலூற்றி அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!