பல்லி விழுந்த சுண்டல் சாப்பிட்ட தாய் 2 பெண் குழந்தைகளுக்கு சிகிச்சை

பல்லி விழுந்த சுண்டல் சாப்பிட்ட தாய் 2 பெண் குழந்தைகளுக்கு சிகிச்சை
X

பைல் படம்.

எர்ணாவூர் அருகே பல்லி விழுந்த சுண்டல் சாப்பிட்ட தாய் 2 பெண் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை எர்ணாவூர் பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதுடைய ஆரோக்கியராஜ். இவரது மனைவி வேளாங்கண்ணி இவர்களுக்கு 10 வயது உடைய டெய்சி, மற்றும் 8 வயதுடைய மரியா நான்சி இவர்கள் இன்று குடும்பத்துடன் ராயபுரம் எம்.சி. ரோட்டில் உள்ள ஜவுளி கடைக்கு சென்று விட்டு பின்னர் அப்பகுதியில் உள்ள கிங் பைவ் ஸ்டார் என்ற டீ கடையில் குடும்பத்துடன் சென்று சுண்டல் சாப்பிட்டுள்ளனர். மரியா நான்சி சாப்பிட்ட சுண்டல் கின்னத்தில் இறந்து போன பல்லி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சுண்டல் சாப்பிட்ட நான்கு பேரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai in agriculture india