மானிய விலையில் பெட்ராேல், டீசல் கேட்டு மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
![மானிய விலையில் பெட்ராேல், டீசல் கேட்டு மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மானிய விலையில் பெட்ராேல், டீசல் கேட்டு மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்](https://www.nativenews.in/h-upload/2022/04/12/1514455-img-20220411-wa0078.webp)
திருவொற்றியூர் அருகே பெட்ரோல், டீசல், கேஸ் விலை மானியம் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவொற்றியூர் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது விலை மானியம் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுகளை கண்டித்து கோஷமிட்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வுகளை குறைக்க வலியுறுத்தியும் அதேபோன்று சத்தீஸ்கர் பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமையாளர் சங்கத்தின் சார்பாக தற்பொழுது கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தமிழகத்தில் உயர்ந்து நிற்கும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் மாற்றுத்திறனாளிகளின் பெரிய அளவில் கஷ்டப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்றும் அதேபோன்று தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கென சத்தீஸ்கர், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கொடுக்கப்படும் மானியத்தை போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
மாற்றுத்திறனாளிகள் கஷ்டப்பட்டு உழைத்து கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை வழி நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதனால் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் பயன்படுத்தும் கேஸ், மூன்று சக்கர வாகனங்களில் பயன்படுத்தும் பெட்ரோல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu