திருவொற்றியூர் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம்
யாகசாலையிலிருந்து புறப்பட்ட கலச ஊர்வலம் நான்கு மாடவீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது.
திருவொற்றியூர் வடக்கு மாட வீதியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது..
சென்னை,திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தெப்பக்குளம் எதிரில் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் அமைந்துள்ளது.
ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம். இக்கோயில் சுமார் 60 ஆண்டுகள் பழைமையானது. தொடக்கத்தில் ஸ்ரீ ஐயப்பன் பஜனை மடமாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயிலாக மாற்றியமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது சுமார் 14 ஆண்டுகள் கழித்து மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் அறுபது ஆண்டு காலத்திற்கும் மேலாக பஜனை மடமாக இருந்து வந்தது கேரளா வாழ் மக்களும் ஐயப்ப பக்தர்களும் இங்கு வந்து பூஜையில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு பக்தர்களால் கோவில் கட்டப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது 14 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு கோவிலாக கட்டப்பட்ட நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது புனர்பிரதிஷ்ட நவிகரண மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருந்த மூலவர் பிரகாரம் தற்போது பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஆக.18-ம் தேதி யாகசாலை அமைக்கப்பட்டு ஹோமங்கள்,விசேஷ வாசனை திரவியங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை யாகசாலையிலிருந்து புறப்பட்ட கலச ஊர்வலம் நான்கு மாடவீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. பனாவூர் குட்டன் நம்பூதிரி நடைபெற்ற சாஸ்தா, பிரதிஷ்டையும், கலாசபிஷேகம், மகா தீபாராதனையோடு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டதையடுத்து பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. அப்போது இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் சரணகோஷங்களை எழுப்பினர்.
இந்நிகழ்ச்சியில் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu