திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் விழா
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் நடந்த மாசி மாத பிரம்மோற்சவ திருக்கல்யாணம்
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டு கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமிகள் வடிவுடையம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ திருவிழா கடந்த 7 ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவிழா நாட்களில், உற்சவர் சந்திர சேகரர், பல வாகனங்களில் எழுந்தருளி மாட வீதி உலா வந்தார். இன்று பிரம்மோற்சவ திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வசந்த மண்டபத்தில், சிவபெருமான், மணக்கோலமான கல்யாண சுந்தரர் அலங்காரத்தில் எழுந்தருளினார். உடன், பார்வதி தேவி, திரிபுரசுந்தரி கோலத்தில் எழுந்தருளினார்.
யாக பூஜைகள் நடைபெற்ற பின்னர் கல்யாண சுந்தரருக்கு, காப்பு மற்றும் பூணுால் அணிவிக்கப்பட்டு, வேதமந்திரங்கள், வாத்தியங்கள் முழங்க, திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடந்தேறியது.அப்போது, கூடியிருந்த பெண்கள், இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். பின், மாலை மாற்றுதல், பால் பழம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன நிறைவாக, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை காண்பதற்காக தெலங்கானா மாநில ஆளுநரும் பாண்டிச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இதன்பிறகு திருக்கல்யாணம் கன்பதற்காக வெளியூர்களில் இருந்து புத்தர்கள் வருகின்றனர். இதற்காக சேவா அன்புபாலம் இருளப்பன் தலைமையில் பென்ஜெமின் மற்றும் நிர்வகிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு தேநீர், மோர் மற்றும் பெண்களுக்கு தாலிகயிறு மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu