திருவெற்றியூர்: கொரோனா தடுப்பூசி முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு

திருவெற்றியூர்: கொரோனா  தடுப்பூசி முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு
X

திருவொற்றியூரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

சென்னை திருவொற்றியூரில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை திருவொற்றியூர் பகுதி வார்டு 11 ல் உள்ள நகர்புற சமுதாய நல மையத்தில் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில், முதன்மைச் செயலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!