எண்ணூரில் 4 கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய மர்ம நபர்கள்

எண்ணூரில் 4 கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய மர்ம நபர்கள்
X
சென்னை எண்ணூரில், 4 கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, திருவொற்றியூரைச் அடுத்த எண்ணூர் பகுதியில், சென்னை மாநகராட்சியால் கட்டி கொடுக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இப்பகுதியில், மர்ம நபர்கள் 4 கடைகளின் பூட்டை உடைத்து, திருடிச் சென்றுள்ளனர்

விமல் என்பவருக்கு சொந்தமான போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து, 23 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 90 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த கேமராவை திருடிச் சென்றுள்ளனர் அதன் அருகே உள்ள இளஞ்செழியன் என்பவரின் எல்ஐசி ஏஜென்ட் அலுவலகத்தில், 1800 ரூபாய் பணம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை திருடி உள்ளனர்

அதேபோல், கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகளில் இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து, ஒன்றில் 2000 பணத்தை திருடி சென்றுள்ளனர். மற்றொன்றில், பணம் இல்லாததால் பூட்டை மட்டும் உடைத்துள்ளனர். மேலும் அருகிலுள்ள மளிகை கடை ஒன்றில் பூட்டை உடைத்து திருடுவதற்க்கு முயற்சி செய்துள்ளனர். புகாரின் பேரில், கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி