மீன்பிடி தடைகாலம் தொடக்கம்: மீன்களுடன் கடைசியாக கரைக்கு திரும்பிய விசைப்படகுகள்
சென்னை திருவெற்றியூர் அருகே காசிமேடு மீன்பிடித்துறை முகத்தில் மீன்கள் வாங்க திரண்ட மக்கள் கூட்டம்
மீனவர்களுக்கான மீன்பிடி தடைகாலம் தொடங்கியதையடுத்து கரைக்கு திரும்பிய விசைப்படகுகள் மீன்விற்பனை அமோகமாக நடைபெற்றது.
தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட விதி முறையின்படி மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீனவர்களுக்கு 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படும்.
அதன் ஒரு பகுதியாக இந்த வருடம் கடந்த 15ம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரையிலான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமானது அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீன்வளம் மற்றும் மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு அலுவலகத்தின் சார்பாக மீனவர்களுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 15ஆம் தேதி முதல் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக் கூடாது என்றும் அதேபோன்று ஏற்கெனவே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 15ஆம் தேதிக்கு முன்னதாக கரைக்கு வர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற படகுகள் 100 சதவீதத்திற்கும் படகுகள் கறைக்கு திரும்பியுள்ளனர்.கரைக்கு திரும்பிய விசைப்படகுகள் மூலம் தாங்கள் பிடித்து வந்த மீன்களை வரும் புதன் கிழமைவரை விற்பனை செய்ய மீனவர்சங்கம் சார்பில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் விடுமுறை தினமான , ஞாயிற்றுகிழமை மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக ஏலக்கூடத்திற்கு அதிக அளவில் குவிந்தனர்.
தற்போதைய தினத்தை விட்டால் கிட்டதட்ட 61 நாட்களுக்கு தாங்கள் மீன்களை வாங்கமுடியாது என்று பொதுமக்கள் மீன்களை வாங்க கணிசமான அளவில் குவிந்தனர். மீன்களின் விலையை பொறுத்தமட்டில் வஞ்சிரம் கிலோ 1300 ரூபாய் வரையிலும்,சங்கரா கிலோ 600 ரூபாய் வரையிலும் வாவ்வல் கிலோ 600 வரையிலும் நண்டு 500ரூபாய் மதிப்பிலும்,கடம்மா கிலோ 450 வரையிலும் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu