பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் ஒருவர் கைது

பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் ஒருவர் கைது
X

துரைராஜ். 

பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த ஒருவரை போக்ஸோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை ராம அரங்கநாதன் தெருவைச் சேர்ந்த 17 வயது உடைய பள்ளி மாணவி இவர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை பெருநகர மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த 38 வயது உடைய துரைராஜ் என்பவர், சிறுமி பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் சிறுமியை பார்த்து தனது வாயினால் உதட்டை கடித்துக்கொண்டு நீ அழகாய் உள்ளாய்; செம்மையாய் இருக்கிறாய் என்று தொந்தரவு செய்து வருவதாகவு‌ம்; அன்று இரவு 9 மணிக்கு அப்பகுதியில் உள்ள தண்ணீர் கேன் கடைக்கு சென்ற சிறுமி பார்த்த துரைராஜ் தன்னை தொடுவது போல் வந்து என்னுடைய செல்போன் நம்பரை தருகிறேன் என்னிடம் பேச வேண்டும் என்று கூறி சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்ததாகவும் சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்த நிலையில், புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து துரைராஜ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!