நடிகர் ஆர்யா திருமணம் செய்வதாக ரூ.70 லட்சம் மோசடி: வழக்கில் திருப்பம்

நடிகர் ஆர்யா திருமணம் செய்வதாக ரூ.70 லட்சம் மோசடி: வழக்கில் திருப்பம்
X

நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா திருமணம் செய்வதாக கூறி, ரூ 70 லட்சம் மோசடி செய்ததாக, ஜெர்மனி பெண் தொடர்ந்த வழக்கில் உயர் நீதி மன்றத்தில் திருப்பம் ஏற்பட்டது.

ஜெர்மனியைச் சேர்ந்த பெண் தன்னை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக ரூ.70 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தாக புகார் அளித்தார். இந்தப் புகாரை பதிவு செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஜெர்மனி பெண் சார்பில் ராஜபாண்டியன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

மனுவில் 'திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன்னிடம் ரூ.70 லட்சம் ரூபாய் வாங்கினார். பிறகு வேறொரு பெண்ணை ஆர்யா திருமணம் செய்து கொண்டார்.

கொடுத்த 'பணத்தை திருப்பிக் கேட்டபோது, திருமணம் செய்த பெண்ணை விவாகரத்து செய்து விட்டு, என்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டாக மனுவில் தெரிவித்துள்ளார்.

இம்மனு, இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. புகாரின் தற்போதைய நிலை குறித்து பதில் அளிக்க, அரசு வக்கில் அவகாசம் கேட்டதால் விசாரணையை வருகிற ஆகஸ்ட் 17ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!