எண்ணூர் விரைவு சாலையில் கார் மீது டேங்கர் லாரி மோதி விபத்து

எண்ணூர் விரைவு சாலையில் கார் மீது டேங்கர் லாரி மோதி விபத்து
X

எண்ணூர் விரைவுச் சாலையில் லாரி- கார் நேருக்கு நேர் மோதி விபத்து நேரிட்டது. 

எண்ணூர் விரைவு சாலையில் கார் மீது டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

சென்னை திருவொற்றியூர் ஹன்சா அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவர் பாலமுருகன் வயது 44; தனியார் கம்பெனியில் மேனேஜர். எம்.ஆர்.எப். சாலை வழியாக எண்ணூர் விரைவு சாலையை கடக்கும்போது, தாங்கல் பகுதியில் இருந்து எண்ணை ஏற்றிக் கொண்டு வந்த டேங்கர் லாரி மீது மோதியது. இதில், கார் அப்பளமாக நொறுங்கியது. காருக்குள் சிக்கிக் கொண்ட பாலமுருகனை, அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு மீட்டு, சிகிச்சைக்காக திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்தால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிரேன் மூலம் விபத்து வாகனஞ்களை அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!