ஆர்.கே. நகர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

ஆர்.கே. நகர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை  தொடங்கியது
X

பைல் படம்

R.K. Nagar Government College Admission of students starts

சென்னை ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக இணையவழியில் புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரியின் முதல்வர் முனைவர் க.சுடர்கொடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது இக்கல்லூரியில் சுமார் 1,900 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் , பி.காம் (சி.எஸ்), பி.எஸ்.சி (கணிணி அறிவியல்), பி.எஸ்.சி (கணிதம்), பி.ஏ.(தமிழ்), பி.ஏ.(ஆங்கிலம்), பி.பி.ஏ ஆகிய 6 பாட வகுப்புகள் ஆங்கில வழியிலும், பி.காம்.(பொது), பி.ஏ.(பொருளாதாரம்) ஆகிய பாட வகுப்புகள் ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியிலும் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் தலா 60 இடங்கள் ( பி.எஸ்.சி. (கணிணி அறிவியல் மட்டும் 50 இடங்கள்) என மொத்தம் 590 மாணவர்களை இந்த ஆண்டு சேர்த்திட அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இப்படிப்புகளில் முதலாம் ஆண்டுக்கான விண்ணப்பம் ஜூன் 22 முதல் ஜூலை 7-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். அரசு வெளியிட்டுள்ள www.tngasa.in அல்லது www.tngasa.org இணையத்தள முகவரிகள் மூலம் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் ரூ. 50-ஐ நெட் பேங்கிங், வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம்.

பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது. வங்கிக் கணக்குகள் மூலம் செலுத்த இயலாதவர்கள் கல்லூரி மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் ஜூன் 22-ம் தேதிக்கு பிறகு எடுத்த வரைவோலை மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் சேலுத்தலாம். அரசு விதிமுறைகளின் படி இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படியில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுடர்கொடி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!