திருவொற்றியூரில் இளைஞர் கொலை: 3 பேர் கைது
பைல் படம்
சென்னை திருவொற்றியூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சோபன் (27) என்ற இளைஞர் சனிக்கிழமை நள்ளிரவு கொலை செய்யப்பட்டார். மேலும் இக்கொலையில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர்.
பழைய வண்ணாரப் பேட்டை மேயர் பாசுதேவ் தெருவை சேர்ந்தவர் சோபன். புறா வளர்ப்பதிலும், பயிற்சியளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சனிக்கிழமை நள்ளிரவு திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த பிரசாத் என்பவருக்கும் ஷோபனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு கைகலப்பாக மாறி பிரசாத்தை பீர் பாட்டிலால் சோபன் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பிரசாத் தான் தாக்கப்பட்டது குறித்து தனது நண்பர்களான ஜோதிபாசு ( 26), சுரேஷ் (23), நிர்மல் குமார் (22) ஆகியோருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அங்கு வரும்படி கூறியுள்ளார்.
அங்கிருந்து சோபன் தப்பி ஓடிவிட்டார். இருப்பினும் அவரை தேடி வந்த பிரசாத்தின் நண்பர்கள் மூவரும் திருவொற்றியூர் தியாகராஜர் சன்னதி அருகே மேற்கு மாட வீதியில் சோபன் நிற்பது நின்று கொண்டிருப்பது தெரிய வந்ததையடுத்து உடனடியாக அங்கு சென்று சோபனை சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சோபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு வந்து சேர்ந்தனர்.மேலும் இப்பகுதியில் தலைமறைவாக இருந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் காதர் மீரான் விசாரணை செய்து வருகிறார் . கைது செய்யப்பட்ட மூவரையும் திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர் படுத்திய போலீசார் நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். போலீஸ் விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஜோதிபாசு மீது ஏற்கனவே கொலை,கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. மது போதையில் நடைபெற்ற கொலை சம்பவம் திருவெற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu