பொது அஞ்சல் அலுவலகம் சார்பில் எல்லைப் பிரிவினை குறித்த புகைப்பட கண்காட்சி

பொது அஞ்சல் அலுவலகம் சார்பில் எல்லைப் பிரிவினை குறித்த  புகைப்பட கண்காட்சி
X

சென்னை திருவொற்றியூரில் பொது அஞ்சல் அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட எல்லைப் பிரிவினை குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சிசுதந்திரப் போராட்டத் தியாகி கே.கோவிந்தசாமி திறந்து வைத்தார்.

எல்லைப் பிரிவினை குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியைசுதந்திரப் போராட்டத் தியாகி கோவிந்தசாமி திறந்து வைத்தார்

சென்னை திருவொற்றியூரில் பொது அஞ்சல் அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பிரிவினை குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சிசுதந்திரப் போராட்டத் தியாகி கே.கோவிந்தசாமி திறந்து வைத்தார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினப் பெருவிழா நிறைவினையொட்டி சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்தியஇ பாகிஸ்தான் எல்லை பிரிவினை குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை சுதந்திர போராட்டத் தியாகி கே.கோவிந்தசாமி திறந்து வைத்தார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தின பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சுதந்திரம் வழங்கும்போது நடைபெற்ற இந்தியாஇ பாகிஸ்தான் எல்லைப் பிரிவினையால் ஏற்பட்ட துயரச் சம்பவங்கள் குறித்த நினைவுபடுத்தும் நிகழ்வு ஆக.10 முதல் 14-ம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை பொது அஞ்சல் அலுவலகம் சார்பில் எல்லைப் பிரிவினையின்போது நடைபெற்ற சம்பவங்கள்இ அரசியல் நிகழ்வுகள் குறித்து அப்போது வெளியான புகைப்படங்கள்இ நாளிதல் செய்திகள் உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்தும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கண்காட்சியை சென்னையைச் சேர்ந்த சுதந்திர போராட்டத் தியாகி கே.கோவிந்தசாமி திறந்து வைத்தார்.

பின்னர் தியாகி கோவிந்தசாமி பேசியதாவது: இந்தியாவிற்கான சுதந்திர போராட்டத்தில் ஒரு பள்ளி மாணவனாக கலந்து கொண்டு எங்களைப் போன்றவர்களெல்லாம் போராடினோம். சுதந்திரம் கிடைத்தபோது கிடைத்த அனுபவங்களை நாம் மீண்டும் சிந்தித்து பார்க்க வேண்டும். காந்தியடிகள் எல்லை பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் நாடு இரண்டாகப் பிளவுபட்டது. அப்போது இரண்டு நாடுகளைச் சேர்ந்தவர்களும், இரண்டு மதங்களாகப் பிரிந்து இடம் பெயரும் நிகழ்வுகள் துயரங்கள் நிறைந்தவை. எனவே ஒரு பக்கம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கொடி இறக்கப்பட்டு நமது தேசியக் கொடி ஏற்றும்போது ஏற்பட்ட மகிழ்ச்சியில் எல்லைப் பிரிவினையால் ஏற்பட்ட துயரங்களும் மறக்க முடியாதது. எனவே இனியும் எவ்வித இன பேதமும் இல்லாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதுதான் இந்த புகைப்பட கண்காட்சி உணர்த்துகிறது என்றார் கோவிந்தசாமி.

நிகழ்ச்சியில் முதன்மை அஞ்சலக தலைவர் எஸ்.பாக்கியலட்சுமி, துணை முதன்மை அஞ்சலக தலைவர் கே.பிரபு சங்கர், அஞ்சலக மக்கள் தொடர்பு அதிகாரி எம்.முனுசாமி, நித்யானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....