ரேஷன்கடைகளில் வெளிநபர்கள் இருந்தால் கைது கூட்டுறவுத்துறை எச்சரிக்கை

ரேஷன்கடைகளில் வெளிநபர்கள் இருந்தால்  கைது கூட்டுறவுத்துறை எச்சரிக்கை
X

பைல் படம்

ரேஷன்கடைகளில் பணியாளர்களைத் தவிர்த்து வெளி நபர்கள் உள்ளே இருந்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது

இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை இன்று வெளியிட்ட உத்தரவு: ரேஷன்கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டு நர்களைத் தவிர இதர வெளி நபர்கள் கடையில் இருப்பதாகவும், இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு கூட்டுறவுத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.அதன்படி,ரேஷன்கடை பணியாளர்களை ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது.

3 ஆண்டுக்கு மேலாக ஏதேனும் பணியாளர் ஒரே கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தால் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள கடைகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

ரேஷன்கடைகளில் சம்மந்தப்பட்ட பணியாளர்களை தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கக்கூடாது. அவ்வாறு வெளிநபர்கள் ரேஷன்கடைகளில் இருந்தால்,

இதுகுறித்து போலீசார் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் வெளிநபர்கள் கடையில் அனுமதித்து, அவர்களுக்கு துணைபோகும் கடையின் விற்பனையாளர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும்.

கடைகளில் வெளி நபர்கள் காணப்படுவதாக புகார்கள் பெறப்பட்டால் இதற்கு சம்மந்தப்பட்ட ரேஷன்கடை விற்பனையாளரே பொறுப்பு என்று எடுத்து கொண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது.

Tags

Next Story
ai robotics and the future of jobs