சென்னை மாநகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல்

சென்னை மாநகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல்
X

மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்

சென்னை மாநகராட்சியில், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை 4 வது மண்டலம், 38வது வார்டு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி விதிமுறைகளை மீறி அனுமதியின்றி கட்டப்பட்டு உள்ளன. அந்த கட்டிடங்களுக்கு மூடி சீல் வைக்க வேண்டும் என, மண்டல அதிகாரி கோவிந்தராஜ், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியிடம் பரிந்துரை செய்தார். அதையேற்று கட்டிடங்களை ஆய்வு செய்து அத்து மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க, சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்

உத்தரவின்பேரில், நேற்று மண்டல அதிகாரி கோவிந்தராஜ் தலைமையில் செயற்பொறியாளர் காமராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் துணையுடன், தண்டையார்பேட்டை அஜித் நகர் 2-வது தெருவில் குமார் என்பவருக்கு சொந்தமான 3.மாடி கட்டிடம் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக பலமுறை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அத்துடன், அனுமதி பெறாமல் கட்டிய கட்டிடத்தையும் மற்றும் தண்டையார்பேட்டை சாஸ்திரி நகர் மெயின் தெருவில் உள்ள ஓட்டல் ஒன்று விதிமுறை மீறி அனுமதியின்றி கட்டப்பட்ட இயங்கிவந்த ஓட்டல் கட்டிடத்தையும் ஆர். கே நகர் போலீஸ் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai in future agriculture