வடசென்னை மக்களவை உறுப்பினர் புதிய செயலி அறிமுகம்

கலாநிதி வீராசாமி எம்பி (பைல் படம்)
வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி பெயரில் புதிய செயலியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
வடசென்னை மக்களவை தொகுதியில் கொளத்தூர், திரு.வி.க.நகர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர் ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. வடசென்னை மக்களவை உறுப்பினராக இருந்து வரும் டாக்டர் கலாநிதி வீராசாமி தனது பெயரில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் Dr.Kalanithi என்ற புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனை தண்டையார்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இப்புதிய செயலியில் சட்டப் பேரவை தொகுதிகள் வாரியாக பொதுமக்கள் இப்புதிய செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளைத் தெரிவிக்கும் வசதிகள் உள்ளன. இதில் தெரிவிக்கப்படும் தகவல் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் நாடாளுமன்ற பணிகள், கட்சி பணிகள் உள்ளிட்டவைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன என டாக்டர் கலாநிதி வீராசாமி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu