திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா தொடக்கம்

திருவொற்றியூர்  வடிவுடையம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா   தொடக்கம்
X

நவராத்திரி திருவிழாவினையொட்டி திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் கோயிலில் அலங்காரத்துடன் வீதி உலா வந்த ஸ்ரீ வடிவுடையம்மன்.

Navaratri Pooja -தமிழகத்தின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றான திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலின் முக்கிய விழா நவராத்திரி திருவிழா

Navaratri Pooja -சென்னை திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொண்ட மண்டலத்திலுள்ள 32 சிவன் கோயில்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகவும் உள்ள திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலின் முக்கிய விழாக்களில் நவராத்திரி திருவிழா முக்கியமானது.

தொடர்ந்து பத்து நாள்கள் சிறப்பாக நடைபெறும் இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக திங்கள்கிழமை இரவு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஸ்ரீ வடிவுடையம்மன் தபசு அலங்காரத்துடன் கூடிய திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை பராசக்தி அலங்காரம், புதன்கிழமை - நந்தினி, வியாழக்கிழமை- கௌரி, வெள்ளிக்கிழமை- பத்மாவதி, சனிக்கிழமை- உமாமகேஸ்வரி, ஞாயிற்றுக்கிழமை - ராஜராஜேஸ்வரி, திங்கள்கிழமை- மஹிஷாசூர மர்த்தினி, செவ்வாய்க்கிழமை- சரஸ்வதி அலங்காரத்தில் வீதி உலா நடைபெற உள்ளது. இறுதி நாளான அக்.5-ம் தேதி புதன்கிழமை மாலை மீனாட்சி அலங்காரத்துடன் வடிவுடையம்மன் தியாகராஜசுவாமியோடு நான்கு மாட வீதிகளில் உலா வரும் உற்சவம் நடைபெற உள்ளது.

நவராத்திரி விழாவினையொட்டி லட்சார்ச்சனை காலை மாலை என இருவேளையும் நடைபெற உள்ளது. நவராத்திர விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் எம்.பாஸ்கரன் தலைமையில் கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Will AI Replace Web Developers