நாகையில் ரூ. 31,580 கோடியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: ஒப்பந்தம் கையெழுத்து
ஐஓசிஎல் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம். வைத்யா, சிபிசிஎல் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார் ஆகியோர் முன்னிலையில் சிபிசிஎல் இயக்குனர் எச்.ஷங்கர், ஐஓசிஎல் செயல் இயக்குனர் ராஜீவ் காக்கர் ஆகியோர் புதுதில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்திட்டனர்
நாகையில் ரூ. 31,580 கோடியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சிபிசிஎல்-ஐஓசிஎல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
நாகபட்டனத்தில் ரூ. 31,580 கோடி மதிப்பீட்டில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) மற்றும் இந்தியன் ஆயில் கார்போரேசன் (ஐ.ஓ.சி.எல்) அதிகாரிகள் புதன்கிழமை புதுதில்லியில் கையெழுத்திட்டனர்.
இது குறித்து சி.பி.சி.எல். நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவல்:மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் இந்தியன் ஆயில் கார்போரேசன் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து நாகபட்டனத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. ரூ. 31,580 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த புதிய ஆலையில் ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலிய பொருள்களை உற்பத்தி செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் 50 சதவீத முதல்கட்ட முதலீட்டுக்கான நிதியை இரண்டு நிறுவனங்களும் தலா 25 சதவீதம் பகிர்ந்து கொள்ள உள்ளன. மீதம் உள்ள 50 சதவீத முதலீட்டு நிதியை நிதி சார்ந்த முதலீட்டு நிறுவனங்கள் மூலம் பின்னர் திரட்டப்பட உள்ளது. இந்த புதிய ஆலை செயல்பாட்டிற்கு வருவதன் மூலம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் பெட்ரோலிய பொருள்களுக்கான தேவையை பூர்த்தி செய்து தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
இதற்கான ஒப்பந்தத்தில் ஐஓசிஎல் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம். வைத்யா, சிபிசிஎல் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார் ஆகியோர் முன்னிலையில் சிபிசிஎல் இயக்குனர் எச்.ஷங்கர், ஐஓசிஎல் செயல் இயக்குனர் ராஜீவ் காக்கர் ஆகியோர் புதுதில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்திட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2011 நிலவரப்படி மொத்தம் 21 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அதன்படி, இந்தியாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனுக்காக பொதுத் துறையில் 17, தனியார் துறையில் 3 மற்றும் ஓமன் எண்ணெய் குழுமம் ஒன்றும் உள்ளன. கால்தியா, டாட்டிபாக்கா, திக்பாய், நும்லிகார்,பரவ்னி, பொங்கைகாவ்ன், குவகாத்தி, கொச்சி, சென்னை, நாகப்பட்டினம், பரோடா, பானிபட்டு, மங்களூர், மதுரா, மும்பை (2), விசாகப்பட்டினம், ஜாம்நகர் ஆகிய இடங்களில் அமைந்திருக்கின்றன
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu