திருவொற்றியூரில் நவீன தொழில் நுட்பத்தில் நடந்த மாநகராட்சி ஏரியா சபை கூட்டம்
நவீன தொழில்நுட்பத்தில் மாநகராட்சி ஏரியா சபை கூட்டம் நடத்திவரும் கவுன்சிலர் கவிகணேசன்
திருவொற்றியூரில் நவீன தொழில்நுட்பத்தில் மாநகராட்சி ஏரியா சபை கூட்டம் நடத்திய கவுன்சிலருக்கு பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை பெரு மாநகராட்சி சார்பில் உள்ள 200 வார்டுகளிலும் கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடப்பது போல் மாநகரிலும் ஏரியா சபை கூட்டம் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வார்டிலும் 10 ஏரியா சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு ஒரு கூட்டத்திற்கு மாநகராட்சி சார்பில் 5000 ரூபாய் வழங்கப்படுகிறது. அப்பகுதியில் உள்ள மாநகராட்சி இடங்களில் கூட்டங்களை நடத்துமாறு கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி இதை அறிவித்து இருந்தாலும் பல இடங்களில் இந்த கூட்டங்கள் வெறும் சம்பிரதாயத்திற்கு நடத்தப்பட்டன. ஒரு சிலர் இது போன்ற கூட்டங்களை இதுவரை நடத்தவே இல்லை.
இந்நிலையில், திருவொற்றியூர் 12 -ஆவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் வீ. கவி கணேசன் இவர் தனது வார்டில் ஏரியா சபை கூட்டங்களில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
பொதுமக்களை வீடு வீடாக சென்று அழைத்து கூட்டங்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் கலை நிகழ்ச்சிகள் சிறப்பு சொற்பொழிவாளர்களைக் கொண்டு பேச வைப்பது, அதிகாரிகளை மக்களிடம் பேச வைப்பது, பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு பாலமாக இருந்து ஏரியா சபை கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
பொதுமக்களும் தங்களை ஒரு அரசியல்வாதி கூப்பிட்டு பேசுகிறாரே என்ற எண்ணத்தில் ஏராளமானோர் இந்த கூட்டங்களுக்கு வருகின்றனர். எல்இடி திரைகளில் விழிப்புணர்வு வீடியோக்கள் தலைவர்களது உரைகளின் சுருக்கங்கள் வெளியிடப்படுகின்றது. கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க வேண்டும், மழை நீர் கால்வாயில் கொசு உற்பத்தி, முதியோர் பென்ஷன் வழங்க வேண்டும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை தெருவில் பார்க்கிங் செய்வதைத் தடுக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து கூறப்பட்டது.
அதிகாரிகள் தரப்பில் மக்கும் குப்பை மக்காத குப்பைகள் அபாயகரமான குப்பைகள் குறித்து விளக்கி நீங்கள் தனித் தனியாக தர வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட் டது. இந்த நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு துறை அதிகாரி களும் திமுக நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.இவர் நடத்தும் கூட்டங்கள் மற்ற கவுன்சிலர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது பொதுமக்கள் தரப்பிலும் இதுபோன்று கூட்டங்கள் நடத்தும் கவுன்சிலரை பாராட்டி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu