சி பி சி எல் நிறுவனம் சார்பில் ரூ.35 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டடம்
சி பி சி எல் நிறுவனம் சார்பில் ரூ.35 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி. திறந்து வைத்தார்
சி பி சி எல் நிறுவனம் சார்பில் ரூ.35 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி. திறந்து வைத்தார்.
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) நிறுவனம் சார்பில் அமைத்துத் தரப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி சனிக்கிழமை திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 14 வது வார்டுக்கு உள்பட்ட தாங்கல் புதிய காலனி பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் பழுதடைந்து நிலையில் காணப்பட்டதையடுத்து இங்கு புதிய கட்டடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் ரூ. 35 லட்சம் செலவில் அனைத்து வசதி களுடன் கூடிய அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
இக்கட்டடத்தை வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி சனிக்கிழமை திறந்து வைத்தார். அப்போது குழந்தைகளின் கல்வி மற்றும் நலன் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கலாநிதி கேட்டறிந்தார். மேலும் ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பாண்மை திட்டத்தின் கீழ் காலடிப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ரூ.68 செலவில் அமைக்கப்பட்ட உள்ள வகுப்பறை கட்டடங்களுக்கு கலாநிதி வீராசாமி அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே. பி.சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பினர் பானுமதி சந்தர், சரண்யா கலைவாணன், சி.பி.சி.எல். நிறுவன அதிகாரிகள் ரோஹித் குமார் அகர்வாலா சங்கர், கண்ணன், பிரேம்சந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu