மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பேரவையில் எம்எல்ஏ கோரிக்கை

தமிழக சட்டமன்றத்தில் மீன்வள துறை மானியக் கோரிக்கையில் திருவெற்றியூர் எம்எல்ஏ. கே.பி.சங்கர் கலந்து கொண்டு பேசியதாவது:
அப்போது, மீனவர்கள் கடலில் காணாமல் போனால் ஏழு ஆண்டுகள் கழித்து தான் அவர் இறந்ததாக கருதி உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்த காலத்திற்குள் அந்த குடும்பம் மிகவும் வாழ்வாதாரத்தை இழந்து வறுமைக்கோட்டுக்கு சென்றுவிடும் காணாமல் போனால், இரண்டு ஆண்டுகளில் அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டுகிறேன். 2019 கொரோனா பெருந்தொற்றால் மீனவ மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தலைவர் கலைஞர் ஆட்சியில் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மீன்பிடி தடை காலத்தில் ரூபாய் 500 என கொண்டு வந்தார். தற்போது இது 5000 ஆக மாறியுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த தொகையை உயர்த்தி தர வேண்டுகிறேன். 2006 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த கலைஞர் டீசல் மானியம் விசைப்படகுக்கு 800 லிட்டர் வழங்கினார். தற்போது 1,800 லிட்டர் வழங்கப்படுகிறது. பைபர் படகிற்கு 300 லிட்டர் வழங்கப்படுகிறது. டீசல் விலை உயரவால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதனால் டீசல் மானியத்தை உயர்த்தி தர வேண்டுகிறேன்.
தேர்தல் அறிக்கையை சொன்னதெல்லாம் முதல்வர் நிறைவேற்றி வருகிறார்கள். இதற்காக நான் எனது தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். மீனவ சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக தலைவர் வாக்குறுதி கொடுத்தார்கள். அதை உறுதி செய்யும்படி முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். எனது தொகுதியில் தான் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரம் உள்ளது. அங்கு 8 மீனவ கிராமங்கள் உள்ளன. அனைவரும் அங்குதான் தொழில் செய்கிறார்கள். அப்பகுதி சேறும் சகதியுமாக உள்ளதால் உயிரிழப்புகளும் பல சேதங்களும் ஏற்படுகிறது. அதனால் அதை ஆழப்படுத்தி தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும். எனது தொகுதியில் 18 மீனவ கிராமங்கள் உள்ளன 50,000 பேர் வாழ்கிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் எம்எல்ஏ கே.பி.பி. சாமியின் முயற்சியால் தூண்டில் வளைவுகள் மறுசீரமைக்கப்பட்டன. அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில் பராமரிக்கவில்லை. அதை பராமரித்து தர வேண்டுகிறேன்.
சீர்காழி பழையாறு துறைமுகத்தில் 350 விசைப்படகுகளும் 700 பைபர் படகுகளும் உள்ளன. அது தூர்வாரப்படாததால் பல படகுகள் தரை தட்டுகின்றன இதனால் இழப்புகள் ஏற்படுகின்றன அதை ஆழப்படுத்தி தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். பொன்னேரி தொகுதி பழவேற்காடு பகுதியில் 30 ஆயிரம் மீனவர்கள் பல்லாண்டு காலமாக வசித்து வருகிறார்கள்.
அனைவருக்கு பட்டா கிடைக்க முதல்வர் தாயுள்ளத்தோடு ஆவன செய்ய வேண்டும். திருவொற்றியூரில் பத்திரபதிவு அலுவலகம் தனியார் இடத்தில் முதல் மாடியில் இருக்கிறது. அங்கு போதிய வசதிகள் இல்லை. நீதிமன்றம் தனியார் இடத்தில் ரூபாய் 2.75 லட்சம் வாடகையில் இயங்குகிறது. மிக நெருக்கடியான சாலை அங்கும் போதிய வசதிகள் இல்லை. தாலுகா அலுவலகம் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்குகிறது. இந்த அரசு அலுவலகங்களை ஒரே இடத்தில் கட்டி தரவேண்டும். தலைவர் கலைஞர் ஆட்சியில் மு.க.ஸ்டாலினிடம் கேட்டு கே.பி.பி. சாமி, திருவொற்றியூரில் கல்லூரி கொண்டு வந்தார்.
ஆனால் அதிமுகவினர் அதை நடுநிலைப்பள்ளியில் நடத்தி வந்தனர். இதனால் அங்குள்ள மாணவர்கள் கஷ்டப்படுகின்றனர். அதற்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும். திருவொற்றியூர் பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக எடுக்கப்பட்டுவிட்டது. அதனால் புதிய பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் திருவொற்றியூரில் ஒரு நல்ல விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu