ஆர்.கே.நகரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு விளையாட்டு வளாகம்
சென்னை ஆர்.கே. நகரில் புதிய விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி
ஆர்.கே.நகரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு விளையாட்டு வளாகம் அமைக்கஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை ஆர்.கே.நகரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு விளையாட்டு வளாகம் அமைப்பதற்கான பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் பக்கிங்காம் கால்வாயினை ஒட்டி கொருக்குபேட்டை சுண்ணாம்புக் கல்வாய் பகுதியில் சென்னை மாநகராட்சி நிதியிலிருந்து ரூ. 10 கோடி மதிப்பீட்டில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பல்நோக்கு ஒருங்கிணைந்த வளாகம் அமைக்கப்பட உள்ளது.
இதில் கபடி, கிரிக்கெட் வலைப்பயிற்சி, குத்துச் சண்டை உள்விளையாட்டு அரங்கம், குத்துச் சண்டை பயிற்சிக் கூடம், இறகுப் பந்து உள்ளரங்கம், கூடைப்பந்து, கைப்பந்து மைதானங்கள், பெண்கள் உடற்பயிற்சிக் கூடம், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானம், சறுக்கல் விளையாட்டு, சதுரங்கம், சிலம்பம் பயிற்சிக்கான கூடங்கள் அமைக்கப்பட உள்ளது.
மேலும் சுமார் இது தவிர சுமார் 3 ஆயிரம் அமரும் வகையில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளன. வெள்ளிக்கிழமை சென்னை மாநகர மேயர் ஆர்.மேயர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை பணிகளை தொடங்கி வைத்தார்.
வடசென்னையில் திறமையான விளையாட்டு வீரர்கள்:
நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: சென்னையில் பின்தங்கிய பகுதியில் ஒன்றான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொருக்குப் பேட்டையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள பல்நோக்கு விளையாட்டு வளாகம் ஓராண்டுக்குள் பணிகளை நிறைவு செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏராளமான விளையாட்டு வீரர்களை அளித்து வரும் வடசென்னையில் இந்த வளாகம் அமைக்கப்படுவதன் மூலம் மென்மேலும் திறமையான விளையாட்டு வீரர்கள் இப்பகுதியிலிருந்து உருவாக்கப்படுவார்கள். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பதக்கங்களை குவிப்பதற்கு விளையாட்டு வீரர்களை வடசென்னை அளிக்கும் என நம்புகிறேன். நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகள் நிறைவுற்றாலும் தொடர்ந்து சிறப்பான முறையில் இந்த வளாகம் பராமரிக்கப்பட தகுந்த நடவடிக்கைகள் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றார் உதயநிதி.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜே.ஜே.எபினேசர் (ஆர்.கே.நகர்), ஐட்ரீ்ம் ஆர்.மூர்த்தி (ராயபுரம்), ஆர்.டி.சேகர் (பெரம்பூர்), மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் இளைய அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu