மணலி காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

மணலி காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
X

மணலி போலீஸ் நிலையம்.( பைல்படம்).

கந்து வட்டி கொடுமையால் மணலி காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மணலி பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 50 ).இவரது கணவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். தனது கணவருக்கு வேலை இல்லாத காரணத்தால் தேவி பெரிய தோப்பு பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் என்ற நபரிடம் 2 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது

இந்நிலையில் வட்டி முறையாக கட்டி வந்த நிலையில் திடீரென கட்ட முடியாத சூழ்நிலை எழுந்தவுடன் மொத்த தொகை 8 லட்ச ரூபாய் வந்ததாகவும் அதற்காக மிரட்டி கையெழுத்து ஒன்றை வாங்கிக்கொண்டு வைத்துக் கொண்டதாகவும் இதனைத் தொடர்ந்து மணலி காவல் நிலையத்தில் தேவி புகார் அளித்துள்ளார்.

காவலர்கள் நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து மனமுடைந்த அவர் கையில் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதனைக் கண்ட காவலர்கள் உடனடியாக தீக்குளிப்பதற்கு முன்னதாக தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றியதால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டவுடன் ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தேவி அனுமதிக்கப்பட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் கொடுத்த தகவலின் அடிப்படையில் மணலி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!