சென்னையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 283 பேருக்கு குண்டாஸ்

சென்னையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட  283 பேருக்கு குண்டாஸ்
X
சென்னையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவொற்றியூரைச் சேர்ந்த அரவிந்தன், 25, அரும்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக், 22, செம்மஞ்சேரியைச் சேர்ந்த சுரேஷ், 23, உட்பட 12 பேர் சென்னை நகரில் பல்வேறு குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

இந்தாண்டில் இதுவரை, 283 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 173 பேர் கொலை, கொலை முயற்சி குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!