இரும்பு கம்பி, சிமெண்ட் விலை அதிகரிப்பு : பொறியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் இரும்பு கம்பி, சிமெண்ட் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலையை கட்டுப்படுத்த பொறியாளர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் இரும்பு கம்பி, சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க கட்டுமான பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கட்டுமான பொருட்களான எம்சாண்ட், சிமெண்ட், இரும்பு உள்ளிட்டவற்றின் விலை சமீபகாலமாக தாறுமாறாக அதிகரித்து வருகிறது. எம்சாண்ட்ரூ.12,500 ஆக இருந்த நிலையில் தற்போதுரூ.15,200 ஆகவும், பி.சாண்ட்ரூ.15,500 ஆக இருந்த நிலையில்ரூ.17,200 ஆகவும், சிமெண்ட்ரூ.380 ஆக இருந்த நிலையில் தற்போது 470 ஆகவும், ஸ்டீல் டன் ஒன்றுக்குரூ.55 ஆயிரமாக இருந்த நிலையில்ரூ.69 ஆயிரம் ஆகவும், செங்கல் 1 லோடுரூ.29,250ல் இருந்துரூ.42,750 ஆகவும், எலக்ட்ரிக்கல் கேபில் 180 மீட்டர்ரூ.4397ல் இருந்துரூ.6387 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது சிமெண்ட் மூட்டை ஒன்றுக்குரூ.60 வரை உயர்த்த போவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இதே போன்று கட்டுமான பொருட்கள் அனைத்தும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வால் தமிழகத்தில் பல இடங்களில் வீடு கட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர் சங்க தலைவர் சரவணன் கூறுகையில், '' கடந்த சில நாட்களுக்கு முன்பு சிமெண்ட் ஒரு மூட்டைரூ.60 வரையும், ஸ்டீல் விலைரூ.12 ஆயிரம் வரையும் உயர்த்தியுள்ளனர். இதனால் கட்டுமானத்துறைக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகொள் விடுத்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil