பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
திருவொற்றியூரில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து கேஸ் சிலிண்டர், இறுதி ஊர்வல வாகனத்தில் வைத்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவொற்றியூரில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து இறந்தவர்களை எடுத்துச் செல்லும் பாணியில் கேஸ் சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனங்களை இறுதி ஊர்வலத்தில் எடுத்துச் செல்லும் வாகனத்தில் வைத்து சாவு மேளம் அடித்தவாறு பட்டாசுகள் வெடித்து நூதன முறையில் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
சென்னை திருவொற்றியூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாக வந்து தேரடி தெருவில் உள்ள காமராஜர் சிலை அருகே வரை ஊர்வலமாக வந்து பின்னர் இறுதி ஊர்வல வாகனத்தின் முன்பு பெண்கள் அமர்ந்து ஒப்பாரி வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர். இதில் வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் மற்றும் அரவிந்த்ஆறுமுகம் சுகுமார் தீர்த்தி துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu