ஈரான் நாட்டு கப்பலை சுற்றிவளைத்தது இந்திய கடலோர காவல்படை: 11 பேர் கைது

ஈரான் நாட்டு கப்பலை சுற்றிவளைத்தது இந்திய கடலோர காவல்படை: 11 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட ஈரான் நாட்டை சேர்ந்த 11 பேர்.

ஈரான் நாட்டு கப்பலை சுற்றிவளைத்து சிறைப்பிடித்து 11 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது.

இந்திய கடல் எல்லை வட அந்தமானை ஒட்டியுள்ள பகுதியில் ஈரான் நாட்டைச் சார்ந்த சிறிய வகை கப்பல் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடலோர காவல் படையினர் விரைந்து சென்று ஈரான் கப்பலைச் சுற்றி வளைத்தனர். பாதுகாப்புடன் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கப்பலை சிறை பிடித்து வந்தனர். மேலும் கப்பலின் உள்ளே இருந்த 11.பேரை கைது செய்து தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் சுங்கத்துறை மற்றும் கடலோர காவல்படையினர் ஈரான் நாட்டிலிருந்து போதைப்பொருட்கள் கடத்திக் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்றும் சர்வதேச அளவில் போதை பொருட்கள் கடத்தல் கும்பலாக இருக்கலாம் என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிடிபட்ட 11 பேர் மீனவர்களா அல்லது தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்களா என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோர காவல்படை சார்பாக மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கப்பல் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் காவல்துறையினர் உட்பட உளவுத் துறையினர், கடலோர காவல் படையினர் என ஏராளமானோர் கூடியதால் அப்பகுதியில் உள்ள மீனவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!