திருவொற்றியூர் பகுதியில் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க பாெதுமக்கள் காேரிக்கை

திருவொற்றியூர் பகுதியில் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க பாெதுமக்கள் காேரிக்கை
X

திருவொற்றியூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பல்வேறு காலி இடங்கள் பராமரிப்பின்றி கிடப்பதால் மக்கள் குப்பை கழிவுகளைக் கொட்டி வருகின்றனர்.

திருவொற்றியூர் பகுதியில் காலி மனையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவொற்றியூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பல்வேறு காலி இடங்கள் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடப்பதால் இந்த இடத்தில், பகுதி மக்கள் குப்பை கழிவுகளைக் கொட்டி வருகின்றனர்.

இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், பிளாஸ்டி கழிவுகளில் மழை நீர் தேங்கி, 'டெங்கு' உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி நிலையமாக மாறியுள்ளது.

புகாரை அடுத்து மாநகராட்சியினர் பலமுறை சுத்தம் செய்தும், அசுத்தம் செய்யும் நபர்களுக்கு அபாரதம் விதித்தும் பலரும் தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றனர். இதை நிரந்தரமாக தடுக்க திருவொற்றியூர் மண்டல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
ai and business intelligence