ஸ்டான்லி மருத்துவமனை விடுதியில் லேப்டாப் திருடிய பட்டதாரி கைது

ஸ்டான்லி மருத்துவமனை  விடுதியில் லேப்டாப் திருடிய பட்டதாரி  கைது
X
கைது செய்யப்பட்ட பட்டதாரி வாலிபர் போலீசாருடன் உள்ளார்.
ஸ்டான்லி மருத்துவமனை விடுதியில் லேப்டாப் திருடிய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை திருவொற்றியூர் அடுத்த வண்ணாரப்பேட்டை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு தனியாக விடுதி உள்ளது. இந்த விடுதியில் தங்கி மருத்துவம் படிக்கும் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவன் ருத்ரேஷ் (வயது 22) மற்றும் அக்க்ஷய் ஆகிய இருவருக்கு அறையிலிருந்த 2 லேப்டாப் காணாமல் போனது. இது குறித்து இருவரும் வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனா இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 25) என்பதும் இவர் பி. ஏ. பட்டதாரி என்பதும் தெரியவந்தது.

மேலும் இவரிடம் விசாரணை நடத்தி இவர் ஐந்து வருடங்களாக டிப்டாப்பாக டிரஸ் செய்துகொண்டு மருத்துவமனைகள்,கல்லூரி விடுதிகளில் இதுபோன்ற இடங்களுக்குச் சென்று லேப்டாப் திருடுவது வழக்கமாக வைத்துள்ளது தெரிய வந்தது. இவரைக் கைது செய்து அவரிடமிருந்து 31 லேப்டாப்கள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai and iot in healthcare