/* */

திருவொற்றியூரில் ராட்சத கடல் அலையில் சிக்கி 4 பேர் மரணம்

ஒரே நாளில் கடல் அலையில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

திருவொற்றியூரில் ராட்சத கடல் அலையில் சிக்கி 4 பேர் மரணம்
X

பைல் படம்

திருவொற்றியூரில் ராட்சத கடல் அலையில் சிக்கி 3 மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவொற்றியூர் சதானந்தபுரத்தை சேர்ந்தவர் ஹரிஷ் (16), தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (19) சந்துரு (20) ஆகிய இருவரும் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் மூவரும் நண்பர்கள் சிலருடன் திருவொற்றியூர் தாங்கல் அருகே உள்ள கடற்கரையில் குளித்துள்ளனர்.
அப்போது திடீரன ஏற்பட்ட ராட்சத அலையில் 3 பேரும் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் ஹரிஷ், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரை அப்பகுதி மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்து போயினர். சந்துருவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் புதன்கிழமை காலை திருவொற்றியூர் குப்பம் அருகே சந்துருவின் சடலம் கரை ஒதுங்கியது.

மற்றொரு சம்பவம்:

திருவொற்றியூர் பூங்காவனபுரம் நாலாவது தெருவை சேர்ந்த முகமது அலி ஜின்னா (50) என்பவர் புதன்கிழமை அதிகாலையில் கடற்கரையில் நடந்து சென்றுள்ளார். அப்போது ராட்சத அலையில் சிக்கிய அவர் கடலில் மூழ்கி இறந்து போனார். இச்சம்பவங்கள் குறித்து திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நான்கு பேரின் சடலங்களும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் கடல் அலையில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 17 May 2023 2:30 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  2. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  3. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  6. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...