தென்மாவட்டங்களில் வெள்ளம்: மீட்பு பணியில் கடலோர காவல்படை மற்றும் கடற்படை
தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் மீட்பு பணியில் ஈடுபட்ட கடலோர காவல் படை மற்றும் கப்பல்படை ஹெலிகாப்டர்
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடலோரக் காவல் படை மற்றும் கடற்படையினர் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கி னால் கடந்த இரு நாள்களாக பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர்.
குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இதனைய டுத்து வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொது மக்களை மீட்கவும், உணவு மற்றும் மருந்து போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கவும் இந்திய கடலோர காவல்படையின் உதவியை மாநில அரசு கோரியது.
இதனையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடலோரக் காவல் படை மற்றும் கடற்படையினர் தொடர்ந்து ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொலைதொடர்பு வசதிகள் முற்றிலுமாகத் துண்டிக்கப் பட்டுள்ளதால் நிலைமை மோசமடைந்து வருகிறது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள கடலோர காவல்படையின் மாவட்ட தலைமையகம் மூலம் கடலோரக் காவல்படையின் 6 மீட்பு குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், திருநெல் வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
தூத்துக்குடியின் கடலோரப் பகுதிகளில் நிலைமையைக் கண்காணிக்கவும், கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் சிக்கித் தவிப்பவர்களைக் காப்பாற்றவும் ஹெலிகாப்டருடன் கூடிய கடலோரக் காவல்படையின் கடல் ரோந்துக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் திங்கள் கிழமை மட்டும் இரண்டு கர்ப்பிணிகள் உள்ளிட்ட 17 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி விமான நிலையம் மூடப்பட்டுள்ளதையடுத்து சென்னையிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அழைத்துச் சென்று மதுரை விமான நிலையத்தில் டோர்னியர் விமானம், ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேவையான விசைப்படகுகள், மீட்புக் குழுவினர் தொடர்ந்து அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu