அதிமுக முன்னாள் அவை தலைவர் மதுசூதனனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

அதிமுக முன்னாள் அவை தலைவர் மதுசூதனனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
X

சென்னை வண்ணாரப்பேட்டையிவ் நடைபெற்ற மறைந்த அவைத்தலைவர் மதுசூதனன்  உருவ படத்திற்கு  அஞ்சலி செலுத்திய அதிமுக நிர்வாகிகள் தமிழ்மகன்உசேன் பா.வளர்மதி உள்ளிட்டோர் நா.பாலகங்கா டிஜி வெங்கடேஷ் பாபு 

மறைந்த அவைத்தலைவர் மதுசூதனன் படத்தை தற்போதைய அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் திறந்து வைத்தார் .

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அவைத்தலைவர் இ.மதுசூதனன் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் அவரது உருவப் படத்திற்கு அதிமுக முக்கியத் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

வண்ணாரப்பேட்டையில் மாவட்டக் கழக செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் தலைமையில் நடந்த நிகழ்வில் மறைந்த அவைத்தலைவர் மதுசூதனன் படத்தை தற்போதைய அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் திறந்து வைத்தார் .

இதில், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் ந. பாலகங்கா, டிஜி வெங்கடேஷ் பாபு, விருதை வி.என் ரவி, கே. பி. கந்தன், டி கே எம் சின்னையா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராயபுரம் ஆர்.மனோ, இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ் ,சங்கரதாஸ், சீனிவாச பாலாஜி, நித்யானந்தம் ,வியாசை இளங்கோ, என்.எம்.பாஸ்கர்.

மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், பெரம்பூர் குமார் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். நினைவு நாளையொட்டி அதிமுகவினரும் மதுசூதனன் குடும்பத்தி னரும் அவரது படத்திற்கு மலவஞ்சலி செலுத்தினர். அன்னதானத்தை அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தொடங்கி வைத்தார். அன்னதானம் வழங்கும் ஏற்பாட்டை மாவட்ட செயலாளர் ஆர். எஸ் .ராஜேஷ் செய்திருந்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!