சென்னை ராயபுரத்தில் வாகனம் மோதிய விபத்தில் பெண் காவலர்கள் காயம்

சென்னை ராயபுரத்தில் வாகனம் மோதிய விபத்தில் பெண் காவலர்கள் காயம்
X

விபத்தில் காயமடைந்த காவலர்கள்.

சென்னை ராயபுரம் மேம்பாலம் அருகே வாகனம் மோதியதில் சோதனையில் ஈடுபட்டிருந்த 2 பெண் காவலர்கள் காயமடைந்தனர்.

சென்னை திருவொற்றியூர் டோல்கேட்டில் பருப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பாரிமுனைக்கு ஜீப் வாகனம் சென்று கொண்டிருந்தது.

அப்போது ராயபுரம் என்.ஆர்.டி மேம்பாலம் அருகே பழுது ஏற்பட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த ராயபுரம் போலீஸ் நிலைய பெண் போலீஸ் வாசுகி வயது 30, ஆர்.எஸ். ஆர். எம். ஆஸ்பத்திரி பெண் போலீஸ் கல்பனா. வயது. 41 ஆகியோர் மீது மோதியதில் தலை மற்றும் காலில் லேசான காயம் ஏற்பட்டது.

அவர்கள் இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து காசிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், ஜீப்பையும் அதை ஒட்டி வந்த டிரைவரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஜீப் பிரேக் பழுதானதால் பிரேக் பிடிக்காமல் போலீசார் மீது மோதியதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா