3வது கணவருக்காக பெற்ற மகளையே தீ வைத்து எரிக்க முயற்சி: கொடூரச்செயலால் பரபரப்பு

3வது கணவருக்காக பெற்ற மகளையே தீ வைத்து எரிக்க முயற்சி: கொடூரச்செயலால் பரபரப்பு
X

பத்மநாபன், பவித்யா, ஜெயலட்சுமி.

சென்னையில் 3வது கணவருக்காக பெற்ற மகளையே தீ வைத்து எரிக்க முயற்சி கொடூர சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை, திருவெற்றியூர் சாத்துமா நகர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன் லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (40). இவர்களுக்கு பானுப்பிரியா (6) பூபாலன் (5) என்ற 2.குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பத்மநாபன் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அதேபோல், ஜெயலட்சுமிக்கு இவர் 3வது கணவன் ஆவார்.

ஜெயலட்சுமிக்கு 19 வயதில் பால்வண்ணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 1 வருடத்தில் இவர்களுக்கு ரேவதி என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில், நாளடைவில் ஜெயலட்சுமிக்கும் அவருடைய கணவரின் 3-வது தம்பி துரைராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு துரைராஜின் ஆசை வார்தையில் மயங்கி அவரை திருமணம் செய்து பின் இருவரும் மும்பை சென்று அங்கு வசித்து வந்துள்ளார்.

அவர்களுக்கு பவித்யா (10) என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த பெண் குழந்தை பிறந்து 2 வருடத்தில் இரண்டாவது கணவரும் ஜெயலட்சுமியை கை விட்டு சென்று விட்டார். 3-வதாக லாரி ஓட்டுநர் பத்மநாபனை ஜெயலட்சுமி திருமணம் செய்துள்ளார்.

கடந்த 7 வருடங்களுக்கு மேலாக பத்மநாபன் – ஜெயலட்சுமி சென்னையிலேயே பல இடங்களில் மாறி, மாறி வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இரண்டாவது கணவருக்கு பிறந்த மகளான பவித்யாவும் இவர்களுடன் தான் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பத்மநாபன் ஜெயலட்சுமியை அடிக்கடி சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது . அதேபோல் நேற்று இரவு 10 மணியளவில் இதே பிரட்சனை குறித்து அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில், போதையில் இருந்த பத்மநாபன் தனது லாரி ஓனரின் தம்பியுடன் ஜெயலட்சுமிக்கு தொடர்பு இருப்பதாகக்கூறி, சந்தேகபட்டு திட்டியதுடன் பவித்யா மீது சத்தியம் செய்ய கூறியுள்ளார்.

அப்போது கோபத்தில் ஜெயலட்சுமி, இந்த பெண் குழந்தை இருப்பது தானே பிரச்சனை என்று தான் வாங்கி வைத்து இருந்த 1-லிட்டர் மண்ணெண்ணையை சிறுமி பவித்யா மீது ஊற்றி தீயை பற்றவைத்ததில், தீ பவித்யா உடலில் பற்றி மளமளவென எரிந்ததால், குழந்தை எரிச்சல் தாங்காமல் கூக்குரல் விட்டவுடன் மனமிறங்கிய தாய் பதட்டத்தில் உடனே அருகில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்துள்ளார்.

உடனே சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையின் உயிரை காப்பாற்ற சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பவித்யா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர் .


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!