ஏர் கன் துப்பாக்கிகளுடன் போதை மாத்திரை கும்பல் கைது

ஏர் கன் துப்பாக்கிகளுடன் போதை மாத்திரை கும்பல் கைது
X

ஆயிரம் விளக்கு பகுதியில், ஏர் கன் துப்பாக்கிகளுடன், போதை மாத்திரை விற்ற, நால்வர் கும்பல் கைது செய்யப்பட்டனர்,

ஆயிரம் விளக்கு பகுதியில், ஏர் கன் துப்பாக்கிகளுடன், போதை மாத்திரை விற்ற, நால்வர் கும்பல் கைது செய்யப்பட்டனர்,

சென்னை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, உள்ளிட்ட பகுதிகளில், இரவு நேரங்களில், போதை மாத்திரை விற்பனை நடப்பதாக ,ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது, ஆயிரம் விளக்கு போலீசார், இரவு நேரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சந்தேக நபர் ஒருவர் பிடிப்பட்டார், அவர், ராயப்பேட்டையை சேர்ந்த நானா(எ) தீபக்குமார் ,28, என தெரிந்தது, அவரிடம், போதை மாத்திரை இருந்ததை பறிமுதல் செய்தனர், அவர் கொடுத்த தகவலின் பேரில், ராயப்பேட்டையை சேர்ந்த அத்னில் அலி,31, திருவல்லிக்கேணியை சேர்ந்த முகமது ஷாமிர்கான், 37, குரோம்பேட்டையை சேர்ந்த முகமது முதர்சிங்,27, ஆகியோரை பிடித்தனர், அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி, 50 அட்டை போதை மாத்திரைகள், போதை டானிக், ஒரு கிலோ கஞ்சா மற்றும் நான்கு ஏர் கன் துப்பாக்கிகள், இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், டெல்லியில் உள்ள ஒரு நிறுவனம் மூலம், ஆன்லைனில் , போதை மாத்திரைகள் வாங்கி, வாட்சப் குழு அமைத்து, விற்றது தெரிந்தது, பெரும்பாலும், இரவு நேரங்களில், போதை மாத்திரை விற்பதால், எதிராளிகளை சமாளிக்க, துப்பாக்கி, கத்தி கை வசம் வைத்திருந்ததாக ,கைதான நால்வர் கும்பல் கூறியதாக , போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது, துப்பாக்கி எங்கே வாங்கினார்கள் எனவும் விசாரணை நடந்து வருகிறது.

Tags

Next Story