சென்னை வண்ணாரப்பேட்டையில் போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில்  போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் கைது
X

போதை பொருள் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவொற்றியூர் அடுத்த வண்ணாரப்பேட்டை பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

அப்போது வண்ணாரப்பேட்டை சீனிவாசா ரயில்வே கேட் அருகே கஞ்சா பொருட்களை விற்பனை செய்த சபீர் மற்றும் புறா கார்த்தி என்ற இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா பொருட்கள் மற்றும் ஒரு பட்டாக்கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்

இதேபோன்று டி.பி.கே தெருவில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹன்ஸ் பாக்கெட், ரெமோ பாக்கெட், கூல் லிப், உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த சையத் இம்ரான்கான் என்ற நபரை கைது செய்தனர். அதேபோன்று மாவா பாக்கெட்டுகளை விற்பனை செய்த பஷீர் என்ற நபரையும் கைது செய்தனர்

காவல்துறையினரின் அதிரடி சோதனையால் போதைப் பொருட்களை விற்பனை செய்த 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்