திமுக உட்கட்சி தேர்தல்: ராயபுரத்தில் மனு தாக்கல் செய்தவர் மீது தாக்குதல்

திமுக உட்கட்சி தேர்தல்: ராயபுரத்தில் மனு தாக்கல் செய்தவர் மீது தாக்குதல்
X

தாக்குதலில் காயமடைந்த செல்வம்.

ராயபுரத்தில் திமுகவில் உட்கட்சி மோதல் காரணமாக ஒருவருக்கு கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு 5 பற்கள் உடைந்ததால் பரபரப்பு.

ராயபுரத்தில் திமுகவில் உட்கட்சி மோதல் காரணமாக ஒருவருக்கு கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து பற்கள் உடைந்ததால் பரபரப்பு.

திருவெற்றியூர் அடுத்த ராயபுரம் ஜீவரத்தினம் சாலையில் சலூன் கடை நடத்தி வருபவர் செல்வம் வயது 53. இவர் கடந்த 30 ஆண்டுகளாக மேலாக திமுகவில் உறுப்பினராக இருந்து வருகிறார் 43வது வார்டின் துணைச் செயலாளராக பணியாற்றி பொறுப்பு வகித்து வருகிறார் தற்பொழுது நடைபெறும் உட்கட்சி தேர்தல் காரணமாக வட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட கடந்த சில தினங்களுக்கு முன்பு விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் தற்பொழுது வட்டச் செயலாளராக இருக்கும் ராஜா என்பவருக்கும் செல்வத்திற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜா என்பவர் நேற்று இரவு செல்வத்தின் சலூன் கடைக்கு வந்து இத்தனை வருடங்களாக நான் கஷ்டப்பட்டு கட்சி பணியாற்றி கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது ஆளுங்கட்சி என்பதற்காக நீ போட்டியிடுவதற்கு மனுதாக்கல் செய்துள்ளாயா என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ராஜா கைகளால் செல்வத்தை தாக்கியதாகவும் இதனால் முகத்தில் பலத்த காயம் அடைந்த செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் முகத்தில் அடிபட்ட காரணத்தினால் வாயின் உட்புறமாக மேற்புற 2 பற்களும் கீழ்ப்புறம் மூன்று பற்களும் என ஐந்து பற்கள் உடைந்து காயம் ஏற்பட்டதாக மருத்துவமனை மூலமாக காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டு அதனடிப்படையில் காசிமேடு N2 காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உட்கட்சி பூசல் காரணமாக ஆளும் கட்சியை சார்ந்தவர்களுக்கே பல் உடைந்த சம்பவம் ராயபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்