மேடவாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மேடவாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

மேடவாக்கம் அருகே இணைப்பு சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

மேடவாக்கத்தில் சாலைப்பணிக்கு தேவையான நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

திருவொற்றியூர் அடுத்த பள்ளிக்கரணையில் இருந்து தாம்பரம் செல்லும் மார்க்கமாக கட்டப்பட்ட புதிய மேம்பாலம் ஒட்டிய சர்வீஸ் சாலைக்காக நெடுஞ்சாலை துறையினர் மூலம் உரியவர்களுக்கு பணம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது,

இதில் 6பேர் மட்டும் பணத்தை பெற்றுகொள்ளாமல் இருந்தனர்.அதனால் புதிதாக கட்டிய மேம்பாலம் மீது வாகனங்கள் செல்லும் போதும் சாலை முழுமையாக தெரியாத நிலை ஏற்பட்டது, அதுபோல் பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் செல்லும் சர்வீஸ் சாலை 600 மீட்டர் தூரத்திற்கு பணிகள் தடைப்பட்டன,

இதனால் நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் ரவிச்சந்திரன்,உதவி பொறியாளர் ஆனந்தராஜ்,உள்ளிட்ட அதிகாரிகள்,காவல் துறை உதவி ஆணையாளர் முருகேசன் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் பொக்லைன்,ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த ஆறு கட்டிடத்தில் குறிப்பிட்ட இடத்தை இடித்து கைப்பற்றினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்