திருவாெற்றியூர் அருகே நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
naam tamilar katchi seeman- திருவொற்றியூர் அடுத்த புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரத்தில் மீனவ பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வடமாநில குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதே போன்று தமிழக காவல்துறையை தாக்கிய வட மாநிலத்தவர்களின் அராஜகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
today chennai news in tamil
மேலும் தமிழகத்திற்கு வட மாநிலத்தவர்கள் ஏராளமான வருவதனால் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றது என்றும் இதனால் வட மாநிலத்தவர்கள் தமிழ் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி நுழைவுச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu