/* */

திருவெற்றியூரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு 27 கடைகள் இடிப்பு

நீண்டகால போராட்டத்துக்குப்பின் திருவெற்றியூரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க முதல்கட்டமாக 27 கடைகள் இடிப்பு

HIGHLIGHTS

திருவெற்றியூரில்  ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு  27 கடைகள் இடிப்பு
X

சென்னை திருவெற்றியூரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு இடையூறாக இருந்த கடைகள் இடிப்பு

நீண்ட போராட்டத்திற்குப் பின் திருவெற்றியூரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு இடையூறாக இருந்த கடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

திருவொற்றியூரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து குடியிருக்கும் பொதுமக்கள் கடந்த மூன்று மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். திருவொற்றியூா் மேற்கு பகுதியை கிழக்குப் பகுதியோடு இணைக்கும் கிளாஸ் பேக்டரி சாலை, கிராமத் தெரு சந்திப்பில் அண்ணாமலை நகா் அருகே ரயில்வே கேட் உள்ளது

வடமாநிலங்களுக்குச் செல்லும் முக்கிய ரயில்பாதை என்பதால் இந்த ரயில்வே கேட் பெரும்பாலான நேரங்களில் மூடப்பட்டே இருக்கும்.20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த சாலைதான் முக்கிய வழியாகும்.ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் நோயாளிகள் வயதானவர்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அண்ணாமலை நகரையும் கிராமத்தெருவையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க தென்னக ரயில்வே முடிவு செய்தது.சுரங்கப்பாதை பணிகள் தொடங்கினால் ரயில்வே நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் 130 குடும்பங்கள் பாதிக்கப்படுவதால் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது

வீடுகளை காலி செய்யச் சொல்லி ரயில்வே துறை சார்பில் பலமுறை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ள போதும் மக்கள் மாற்று இடம் தராமல் வீடுகளை காலி செய்ய மாட்டோம் என பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.முதற்கட்டமாக சுரங்கப் பாதை அமைப்பதற்கு இடையூறாக இருக்கும் கடைகளை இடித்து பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் மேலும் மாற்று இடம் வழங்கிய பின்பு வீடுகளை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரயில்வே துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகளிடம் சமரசம் பேசி முடிக்கப்பட்டது

இதன் அடிப்படையில் இன்று முதல் கட்டமாக ரயில்வே அதிகாரிகள் ரயில்வே போலீசார் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் 27 கடைகள் இடிக்கப்பட்டன.இதனைத்தடர்ந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் மூன்று மாதத்தில் தேவைப்படும் வீடுகளை கையகப்படுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Updated On: 23 April 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்
  9. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு